இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமரின் 5 சபதங்கள் - என்ன தெரியுமா?

இந்தியர்களுக்குக் கூறிய உறுதி மொழிகளில் முதன்மையானது வளர்ந்த நாடு இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

Update: 2022-08-20 00:10 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திங்கட்கிழமை சுதந்திர தின உரையில், நாடு சுதந்திரம் அடைந்த 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047 ஆம் ஆண்டுக்குள் "பஞ்ச் பிரான்" இதனை தமிழில் ஐந்து சபதங்கள் என்பதை அனைத்து இந்தியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே முதல் சபதம் என்றார். இது ஒரு "பெரிய தீர்மானம்" என்று பிரதமர் கூறினார் . அது இப்படி நடக்கக் கூடும்? எவ்வளவு தூரம் வந்திருக்கிறது? இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது .


"வளர்ந்த" நாடு என்றால் என்ன? வெவ்வேறு உலகளாவிய அமைப்புகளும் ஏஜென்சிகளும் நாடுகளை வெவ்வேறு விதமாக வகைப்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் 'உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள்' நாடுகளை மூன்று பரந்த பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. வளர்ந்த பொருளாதாரங்கள், வளர்ந்துகொண்டே இருக்கும் பொருளாதாரங்கள், பின்தங்கிய நிலையில் உள்ள பொருளாதாரங்கள் என்று மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன இந்தியா தற்போது இதில் இரண்டாவது இடமாக வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம் என்ற நிலையில்தான் இருந்துகொண்டிருக்கிறது. இவற்றை வளர்ந்த பொருளாதாரமாக மாற்ற முயற்சியை தற்போது பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்துள்ளது. 


ஐ.நா வகைப்பாடு மிகவும் துல்லியமானது அல்ல என்றும், அது வரையறுக்கப்பட்ட பகுப்பாய்வு மதிப்பைக் கொண்டது என்றும் வாதிடலாம். தரவரிசை 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள முதல் மூன்று நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நார்வே மட்டுமே வளர்ந்த நாடு பிரிவில் அடங்கும். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி 31 நாடுகளின் பட்டியல் வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதாரம் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

Input & Image courtesy: Indian express

Tags:    

Similar News