2023-ல் உலக அளவில் 6-வதாக இந்திய பொருளாதாரம் மாறும்: பிரிட்டிஷ் அறிக்கை முடிவு !
உலக அளவில் 2023, இந்திய பொருளாதாரம் ஆறாவது மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும்.
இந்திய பொருளாதாரம் தற்போது பல்வேறு தடைகளைத் தாண்டி முன்னோக்கிய பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இவற்றுக்கு மற்றொரு நம்பிக்கையை அளிக்கும் பொருட்டு பிரிட்டிஷ் கன்சல்டன்சி சைபர் அறிக்கை ஒரு அறிக்கை முடிவை நேற்று வெளியிட்டுள்ளது. அதாவது இந்த அறிக்கையின் முடிவின்படி, 2023-ம் ஆண்டிற்குள் இந்திய பொருளாதாரம் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை விட மிஞ்சி, உலகளவில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் கூறியுள்ளது.
மேலும் இந்த அறிக்கை இதுபற்றி கூறுகையில் அடுத்த ஆண்டு பிரான்ஸ் பொருளாதாரத்தையும், அதற்கு அடுத்த ஆண்டு பிரிட்டன் பொருளாதாரத்தினை மிஞ்சி இந்திய பொருளாதாரம் ஆறாவது இடத்திற்கு முன்னேறும் என்று முடிவு கூறுகிறது. மேலும் மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடுகையில், 2022 உலக அளவில் பொருளாதார உற்பத்தி முதன் முறையாக 100 டிரில்லியன் டாலர்களை அடையும் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில் சீனா அமெரிக்க பொருளாதாரத்தின் மிஞ்சுவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.
"2022- களின் முக்கியமான பிரச்சினை என்னவென்றால், உலகப் பொருளாதாரங்கள் பணவீக்கத்தை எவ்வாறு சமாளிக்கின்றன? என்பதுதான். இது இப்போது அமெரிக்காவில் 6.8 சதவீதத்தை எட்டியுள்ளது" என்று செப்ரின் துணைத் தலைவர் டக்ளஸ் மெக்வில்லியம்ஸ் இதுபற்றி கூறினார். எனவே இந்த அறிக்கையின் முடிவை வைத்து பார்க்கும் பொழுது இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் பல்வேறு பாராட்டுகள் பெறும் என்பதும் மறுப்பதற்கில்லை.
Input & Image courtesy: Livemint