உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா: இங்கிலாந்து பிரதமர் புகழாரம்

போரிஸ் ஜான்சன், ஜனநாயகம், நண்பர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

Update: 2022-04-18 01:56 GMT

இந்தியா பொருளாதார சக்தி மிக்க நாடு என்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று குறிப்பிட்டுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள். வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு இங்கிலாந்து பிரதமர் வருகை தர உள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்த பயணம் அமைய உள்ளதாகவும் இங்கிலாந்து தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐந்தாவது பெரிய மாநிலமாக குஜராத்திற்கு இங்கிலாந்து பிரதமர் வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.


எனவே இங்கிலாந்தில் வருகை தந்தவுடன் போரிஸ் ஜான்சன் அவர்கள் இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் தொழில் ஒப்பந்தம் தொடர்பாக முடிவுகளையும் மேற்கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் காண்பதற்காக புதுடில்லிக்கு விஜயம் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன் இங்கிலாந்து உடனான இந்தியாவின் வர்த்தக உறவை வரும் 2032 ஆம் ஆண்டிற்குள் 28 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பதே இவருடைய இந்திய பயணத்தில் முதன்மையான நோக்கமாக உள்ளது.


மேலும் வரும் ஆண்டுகளில் இந்தியாவுடனான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கிலும் இங்கிலாந்து செயல்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து தரப்பில் இங்கு வேலைவாய்ப்பு சுமார் 95,000 தொழில்களை ஆதரித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே குஜராத்தில் ஏற்படும் இந்த கூட்டணி ஒப்பந்தத்தின் மூலம் அங்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Input & Image courtesy:Ani News

Tags:    

Similar News