இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பு சீராக உள்ளது: மத்திய நிதி அமைச்சகம் தகவல் !
இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பு வசதிகள் தற்போது சீராகவும், வலுவாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது அடிப்படை பொருளாதார கட்டமைப்பு வலுவாக மற்றும் சீராக உள்ள காரணத்தால் தான் கொரோனா தாக்கத்திலும் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தகவலை தெரிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இதுபற்றி கூறுகையில், நடப்பு நிதியாண்டில், குறிப்பாக காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 20.1 % உயர்ந்துள்ளது. எனவே நோய் தொற்று காலத்திலும் கொண்டு இது சீராக உள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மைனஸ் 24.4 சதவீதமாக பின்னடைவை சந்தித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. வேளாண் துறையின் வளர்ச்சி சுமார் 101 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 9 சதவீதம் குறைந்திருந்தது. ஜூன் மாத தயாரிப்பு துறை குறியீடு, 95 சதவீதம் வரை எட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்களும் குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சரியான வளர்ச்சி நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.
ஜூலை மாதத்தில் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி குறியீடு, 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. மின்சாரம், சரக்கு ரயில் போக்குவரத்து, சுங்கச் சாவடி வசூல், டிஜிட்டல் பரிவர்த்தனை, விமான சேவை, GST உள்ளிட்டவை வாயிலான வருவாய் அதிகரித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலும், இந்திய பொருளாதாரம், வீழ்ச்சியில் இருந்து V வடிவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது இறங்கு முகத்தில் இருந்து ஏறுமுகமாக சென்று கொண்டிருப்பதை இது குறிக்கிறது. இதற்கு, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு காரணிகள் வலுவாக உள்ளது தான் காரணம் என்று தற்பொழுது மத்திய நிதி அமைச்சகம் சுட்டிக்காட்டியிருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.
Input & image courtesy:livemint