வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் இந்திய பொருளாதாரம்: நிதி அமைச்சகம் அறிக்கை!

வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்வதாக நிதிஅமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Update: 2022-02-16 14:14 GMT

2022-23 ஆம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டில் புதிய பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நோய் தொற்றுக்கு பிறகு உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு தற்போது இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்வதாகவும் மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பொருளாதாரம் எப்படி உள்ளது? என்பது தொடர்பான நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் நாட்டில் எந்த தொழில் துறை தற்போது அதிக வளர்ச்சியடைந்து வருகிறது என்பதையும் அறிந்துகொள்ள உதவுகிறது.


மேலும் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பல்வேறு நலன்களை அடைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறியுள்ளது. நெல்கொள்முதல் விலைகளில் நேரடி செயல்முறைகளை ஏற்படுத்தும் விதமாக விவசாயிகள் நேரடி பலன் அடைந்துள்ளார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் தரமான கொள்முதல் ஆகியவற்றின் மூலமாக பிரதம மந்திரி கிசான் திட்டம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் IMF தற்பொழுது உலக நாடுகளை மதிப்பிடப்பட்ட அதன் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதை கூறியுள்ளது. அதில் இந்தியா மேல்நோக்கி மிகப்பெரிய நாடாக இருப்பதை நாம் பார்க்க முடியும்.


இந்த நோய் தொற்றின் மூன்றாம் அலையில் இருந்து தற்பொழுது தான் இந்திய பொருளாதாரம் விரைவாக நீண்டு வருகிறது. மேலும் பொருளாதார விரைவான வளர்ச்சிக்கு உதாரணமாக வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் தொழில்துறை விவசாயத் துறை மற்றும் நவீன உற்பத்தி துறைகளில் தற்போது தான் முழு எழுச்சியுடன் வேலையை செய்யத் துவங்கி உள்ளது. இது இந்தியாவிற்கு மற்றொரு புத்துணர்ச்சியைத் தரும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Economic time

Tags:    

Similar News