இந்தியாவில் பசுமை திட்டங்களுக்காக முதலீடு செய்யும் இங்கிலாந்து அரசு !

இந்தியாவில் பசுமை திட்டங்களுக்காக 1.2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் பிரிட்டன் அரசு.

Update: 2021-09-04 13:49 GMT

இந்தியாவில் சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்பில் பசுமை திட்டங்கள், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திட்டங்களில் இங்கிலாந்து முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து இந்தியா, இங்கிலாந்து ஒப்பந்தம் வருடாந்திர உச்சி மாநாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இங்கிலாந்து நிதியமைச்சர் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியாவில் பசுமைத் திட்டங்கள் மற்றும் புதுபிக்கதக்க எரிசக்தி ஆகியவற்றினை மேம்படுத்தும் வகையில் 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொது மற்றும் தனியார் முதலீடுகள் செய்யப்படும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியாவின் இலக்கு இந்த புதிய முதலீடுகள் மூலம் 2030ம் ஆண்டுக்குள் 450GW புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் இலக்கை ஆதரிக்கும்.


மேலும் 2022-26 காலகட்டத்தில் இந்தியாவில் பசுமைத் திட்டங்களில் இங்கிலாந்தின் வளர்ச்சி நிதி நிறுவனமான CDCயின் 1 பில்லியன் டாலர் முதலீடு, புதுமையான பசுமை தொழில்நுட்பத் தீர்வுகளில் பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆதரவாக கூட்டு முதலீடுகள் மற்றும் ஒரு புதிய 200 மில்லியன் டாலர் தனியார் மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்களையும் இந்த கூட்டத்தில் போடப்பட்டது. மேலும் இது தொடர்பாக, இந்தியா கூட்டுறவு காற்று மற்றும் சூரிய சக்தி மற்றும் பிற பசுமை தொழில்நுட்பங்கள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு தனியார் மூலதனத்தை திரட்டும். 


இந்த கூட்டு ஒப்பந்தத்தினையடுத்து இந்த கூட்டணியானது 6.2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களுக்கு பொறுப்பான நிதி நிறுவனங்களின் குழுவால் வழிநடத்தப்படும் மற்றும் காலநிலை இலட்சியம் மற்றும் தீர்வுகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு தூதர் மைக்கேல் ப்ளூம்பெர்க் தலைமையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஆதரவு சமீபத்தியில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49%லிருந்து 74% ஆக உயர்த்துவதற்கான இந்தியாவின் சமீபத்திய முடிவை பிரிட்டிஷ் அரசு தரப்பு வரவேற்றது. இது இங்கிலாந்து நிறுவனங்களுக்கு இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளில் அதிக உரிமையை பெற உதவும் என்று பிரிட்டிஷ் உயர் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Input:https://www.businesstoday.in/top-story/story/uk-announces-12-bn-package-for-investment-in-indias-green-renewable-energy-projects-305772-2021-09-02

Image courtesy:business today


Tags:    

Similar News