இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% வளர்ச்சி அடையும்: FICCI கணக்கெடுப்பு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% ஆக வளர்ச்சி அடையும்.

Update: 2022-07-23 02:26 GMT

நோய்த் தொற்றுக்கு பிறகு தற்போது பல்வேறு நாடுகளில் பொருளாதார நிலை சற்று குறைவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் பல்வேறு உலக நாடுகள் தங்களுடைய நாட்டின் பொருளாதார நிலைமையும் எடுத்துக் கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்தியா தொடர்ச்சியான வண்ணம் தன்னுடைய பொருளாதார உறவை ஒவ்வொரு முறையும் வலுவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


FICCI இன் எகனாமிக் அவுட்லுக் சர்வே முடிவுகளில் மேலும் இந்த நிதியாண்டின் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை விகிதம் 5.65% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் அதன் விளைவுகள் காரணமாக முந்தைய கணக்கெடுப்பு சுற்றில் 7.4% மதிப்பீட்டில் இருந்து வளர்ச்சி கணிப்பு குறைக்கப்பட்டுள்ளது" என்று FICCI தெரிவித்துள்ளது. தொழில்துறை அமைப்பான FICCI வியாழனன்று இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7% வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


இது முந்தைய கணிப்பு 7.4% ஐ விட குறைவாக உள்ளது, முக்கியமாக தற்போதைய அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக FICCI இன் எகனாமிக் அவுட்லுக் சர்வே தொழில்துறை, வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முன்னணி பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய தற்போதைய கணக்கெடுப்பு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு 2022-23 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர சராசரி GDP வளர்ச்சியை 7% ஆகக் கணித்துள்ளது, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வளர்ச்சி மதிப்பீடு முறையே 6.5% மற்றும் 7.3% ஆகும்.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News