இலங்கைக்கு இந்தியா வழங்கிய உளவு விமானம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இலங்கைக்கு இந்தியா பரிசாக வழங்கிய டோர்னியர் உளவு விமானத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் முன்னிட்டு இலங்கை அரசுக்கு இந்தியா சார்பில் டோர்னியர் -228 என்று உளவு விமானம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வதில் இன்னும் ரக போர் விமானம் மற்றும் உளவு விமானம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதையும் இந்திய தரப்பில் தெரிவித்துள்ளது. தற்போது இதில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
இதனை இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லே என்பவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அவரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளார். இரண்டு எஞ்சின்கள் கொண்ட இந்த விமானம் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது ஆகும். மேலும் 16.56 மீட்டர் உயரமும் 4.86 மீட்டர் நீளமும் கொண்ட இந்த விமானம் கிட்டத்தட்ட 19 வீரர்கள் சுமந்து செல்லும் அதிநவீன போர் விமானம் ஆகவம் கருதப்படுகிறது. இந்த வகை விமானங்கள் 3900 கிலோ எடையும மற்றும் 1885 கிலோ எரிபொருள் தாங்கும் திறன் கொண்டுள்ளது.
அதி நவீன வசதிகள் கொண்ட இந்த ரக விமானத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற பணிகளுக்காக இந்திய கடற்படையில் உளவுப் பிரிவினர் மற்றும் கடலோர காவல் பிரிவினர் பயன் படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்திற்கான விமானிகளுக்கு பயிற்சியும் இந்திய வழங்கியுள்ளது. விமானத்தை கையாளுவது எப்படி என்பது தொடர்பான பயிற்சி 15 இலங்கை விமானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Junior Vikatan News