ஆப்கானிஸ்தானுக்கு 10வது முறையாக மனிதாபிமானத்துடன் மருந்து பொருட்களை அனுப்பி வைத்த மோடி அரசு

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பத்தாவது முறையாக மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்தது இந்தியா.

Update: 2022-08-21 14:43 GMT

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்குள்ள பொதுமக்கள் பல்வேறு மருத்துவ வசதிகள் இன்றி துயரப்பட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ பொருட்கள் இல்லாமல் பல்வேறு நோயாளிகள் உயிரிழக்கும் அபாயமும் தற்போது ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு போரினால் கடுமையாக ஆப்கானிஸ்தான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தாவது முறையாக தற்போது அடுத்த கட்டமாக மருந்து உள்ளிட்ட மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பி வைத்து உள்ளது. 


உயிர் காக்கும் மருந்துகள், காச நோய் எதிர்ப்பு மருந்துகள், கொரோனா தடுப்பு ஊசிகள் உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 வது கட்டமாக இந்தியா அனுப்பிய மருந்து பொருட்கள் விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் அமைந்துள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் இந்த அனைத்து மருத்துவ பொருட்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு இதுவரை 32 டன் அளவிலான மருந்து பொருட்கள் இந்திய அனுப்பி வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது உள்நாட்டு கலவரங்கள் காரணமாக, அங்குள்ள மக்கள் பல்வேறு உதவிகள் இன்றி தவிர்த்து வருகிறார்கள். இத்தகைய ஒரு சூழ்நிலையில், இந்தியாவில் உள்ள மக்கள் சார்பாக மத்திய அரசாங்கம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையில் இத்தகைய மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்துள்ளது மனிதநேயத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News