சக்தி வாய்ந்த ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கு 4-வது இடம் தான்: காரணம் என்ன?
சக்தி வாய்ந்த ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கு 4-வது இடம் கொடுப்பதற்கான முக்கிய காரணம் இதுவாக தான் இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் ஆசிய அளவில் பொருளாதார ரீதியாக உயர்ந்து இருக்கும் நாடுகளுக்கு லோவி இன்ஸ்டிடியூட் சார்பாக ஆசியா பவர் இன்டெக்ஸ் வெளியீட்டு கவுரவப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இந்த வருடமும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ஆனால் இதில் இந்தியாவிற்கு 4-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடுகள் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி சீனா முதல் இடத்திற்கு முன்னேறியது.கொரோனா தொற்றுக் காலத்தில் அனைத்து நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சீனா கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வந்த நிலையில் உற்பத்தியை அதிகரித்துப் பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியைப் பதிவு செய்து சீனா மீண்டும் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டிடியூட் வழங்கிய மதிப்பின்படி, சீனா முதல் இடத்தில் இருக்கும் நிலையில், சீனாவுடன் போட்டிப்போடும் இந்தியா 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு அதிலும் நேபாளம், இலங்கை நாடுகள் இந்த பட்டியலில் முன்னேறியுள்ளது. 2021ல் இந்தியாவில் மதிப்பீடு பெரிய அளவில் சரிந்துள்ளது. லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஆசியா பவர் இன்டெக்ஸ் பட்டியலில் இந்தியாவின் மதிப்பீட்டு 2020ஐ ஒப்பிடுகையில் 2 புள்ளிகள் சரிந்து 2021ல் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. ஆசியாவில் இந்தியாவுடன் சேர்ந்து சுமார் 18 நாடுகளின் மதிப்பீட்டு 2021ஆம் ஆண்டு லோவி இன்ஸ்டிடியூட்-ன் ஆசியா பவர் இன்டெக்ஸ் பட்டியலில் குறைந்துள்ளது.
ஆனால் எதிர்கால வளர்ச்சி அளவீடுகளை பொருத்த வரையில் அமெரிக்கா, சீனா-விற்கு அடுத்தபடியாக இந்தியா தான் உலகளவில் உள்ளது. லோவி இன்ஸ்டிடியூட் 2030ஆம் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் கணிப்பில் இது வெளியாகியுள்ளது. இந்தியா பாதுகாப்புக் கூட்டணியில் 7வது இடத்தில் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சி கூட்டணியில் 8வது இடத்தில் உள்ளது. இவ்விரண்டு காரணங்களால் தான் இந்தியா வருங்காலத்தில் முன்னேற காரணமாக இருக்கும் என்று லோவி இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
Input & Image courtesy: India Today