10% அதிகமாக வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம்: நிதி அயோக் துணை தலைவர் கருத்து!

இந்திய பொருளாதாரம் தற்போது 10 சதவீதம் அதிகமாக வளர்கிறது என்று நிதி அயோக் தலைவர் கூறியுள்ளார்.

Update: 2021-11-03 13:35 GMT

தற்போது இந்தியா கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வரும் பொருளாதாரம் எரிபொருள் உயர்வு, நிலக்கரி பிரச்சனை எனப் பல பாதிப்புகளை எதிர்கொண்டாலும் பண்டிகை கால வர்த்தகம் இந்தத் தாக்கத்தை குறைத்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்தச் சூழ்நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து நிதி அயோக் அமைப்பின் துணை தலைவரான ராஜீவ் குமார் அவர்கள் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிதி அயோக் அமைப்பின் துணை தலைவரான ராஜீவ் குமார் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். 


அதேபோல் அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வரையில் உயரும் என்று கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நிதி அயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜீவ் குமார் கடந்த 7 வருடத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளத்தை உறுதியாகக் கட்டமைத்துள்ளது. இதன் மூலம் இந்திய வர்த்தகச் சந்தை பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 2 வருடத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சியில் சில தடுமாற்றங்கள் இருந்தது. IMF அமைப்பு 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 9.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்று கூறியுள்ளதாக ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.


மேலும் IMF அடுத்த 5 வருடத்தில் உலகிலேயே வேகமான வளரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா முதன்மையாக இருக்கும் என்று கணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் 10 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடையும் என்று ஏற்கனவே RBI அறிவித்த கணிப்பையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். 

Input & Image courtesy:Economic times



Tags:    

Similar News