விவசாயத்தை நவீனமயமாக்க விரும்பும் இந்திய பொருளாதாரத்தின் நடவடிக்கைகள் !

விவசாயத்தை நவீன மயமாக்க இந்திய பொருளாதாரம் விரும்புகிறது என்று திட்ட திட்டக்கமிஷனின் முன்னாள் தலைவர் கூறினார்.

Update: 2021-09-24 12:47 GMT

இந்திய பொருளாதாரம் இந்த நோய்தொற்று காலத்தில் கூட தன்னுடைய நிலையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது என்று முன்னாள் திட்டக்கமிஷனின் முன்னாள் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா வியாழக்கிழமை அன்று கூறினார். ஒரு மெய்நிகர் நிகழ்வில் உரையாற்றிய அலுவாலியா இதுபற்றி கூறுகையில், தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய பணமாக்கல் திட்டத்திற்கும்(NMP) ஆதரவாக இருப்பதாக கூறினார். இது மின்சாரம் முதல் சாலை மற்றும் ரயில்வே வரையிலான துறைகளில் உள்ள உள்கட்டமைப்பு சொத்துக்களின் மதிப்பைத் திறக்கும். இதன் மூலம் நிதி சார்ந்த துறைகளில் ஈடுபாட்டை அதிகரிக்க முடியும்.  


பொதுவாக தனியார் துறையும் இத்தகைய முதலீடுகளில் ஈடுபடுவது பொருளாதாரத்தை அது அதிகளவில் மீட்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.  வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மான்டெக் சிங், விவசாயத்தை நவீனமயமாக்குவது விரும்பத்தக்கது. நவீனமயமாக்கும் என்பது அனைத்திலும் புதுமையான கண்டுபிடிப்புகளை புகுத்துவது ஆகும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.  ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 20.1 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது.


இது கடந்த ஆண்டின் மிகவும் பலவீனமான அடித்தளத்தால் உதவியது மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் ஈடுபாட்டை முறையாக  ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நடப்பு நிதியாண்டிற்கான நாட்டின் வளர்ச்சி திட்டத்தை முன்னதாக மதிப்பிடப்பட்ட 10.5 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதே நேரத்தில் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.3 சதவீதமாக வளரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.  

Input & Image courtesy:Economic times



Tags:    

Similar News