இந்திய பொருளாதாரத்தில் வரலாறு காணாத வகையில் அன்னிய முதலீடு!

இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் அன்னிய முதலீடு பெற்றுள்ளது.

Update: 2022-01-03 12:38 GMT

பிரதமர் மோடி அவர்கள் விவசாயிகளுக்கான PM-Kisan பத்தாவது தவணை வெளியீட்டு நிகழ்ச்சியில் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார். இன்று, நமது பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 8% க்கும் அதிகமாக உள்ளது. வரலாறு காணாத அன்னிய முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளது. நமது அந்நியச் செலாவணி கையிருப்பு சாதனை அளவை எட்டியுள்ளது. மேலும் நோய் தொற்றுக்கு முன்பு இருந்த ஒரு சூழ்நிலையை தற்பொழுது இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  


GST வசூலில் பழைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி, குறிப்பாக விவசாயம் போன்ற விஷயங்களில் புதிய முன்னுதாரணங்களை நாங்கள் அமைத்துள்ளோம். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மோடி தனது உரையில் அவர் கூறுகையில், "2021 ஆம் ஆண்டில் UPI மூலம் ரூ. 70 லட்சம் கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். இந்தியாவில் 50,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் இயங்குகின்றன. அவற்றில் 10,000 கடந்த ஆறு மாதங்களில் தொடங்கப்பட்டன என்றார். 


2022 ஆம் ஆண்டில், நாம் நமது வளர்ச்சி வேகத்தை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார். "கொரோனா வைரஸ் சவால்களை முன்வைத்துள்ளது. ஆனால் அது நமது வேகத்தை நிறுத்த முடியாது. கொரோனாவுக்கு எதிராக இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் போராடும், மேலும் அதன் தேசிய நலன்களையும் நிறைவேற்றும்" என்று மோடி அவர்கள் கூறினார். இன்று, இந்தியா தனது ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலை ஒருபுறம் வலுப்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், அதே சமயம் பெருமையுடன் அதன் கலாச்சாரத்தை மேம்படுத்துகிறது என்பதை மோடி அவர்கள் நினைவு கூர்ந்தார். 

Input & Image courtesy: Indianexpress




Tags:    

Similar News