இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது - மத்திய நிதித்துறை செயலர் கூறும் சூப்பர் தகவல் என்ன?
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய நிதித்துறை செயலர் கருத்து.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தபடியே உள்ளது'' என மத்திய நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் தெரிவித்தார். சிட்டி யூனியன் வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் 16வது நினைவு சொற்பொழிவு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மத்திய நிதித்துறை செயலர் சோமநாதன் அவர்கள் அடைக்கப்பட்டு இருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்திய பொருளாதாரத்தின் பற்றிய கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மின்சக்தி கூட்டணிக்கு தலைமை ஏற்று இந்தியா செயல்படுவதாகவும் பற்றியும், UPI என்ற வங்கிகளுக்கான அடையாள எண் வழங்குவதில் வெற்றி அடைந்து உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றாக்குறையின் போது செலவினங்கள் தரமான சிறு திருத்தம் போன்ற சவால்களை சந்தித்து வருவதாகவும் நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டுவந்தால் பொது மக்களின் சேமிப்பு நிச்சயம் உயரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த 6 முதல் 8 சதவீதம் வரை ஆண்டுக்கு பொருளாதார வளர்ச்சி இருப்பதாகவும் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா தற்போது முன்னோடியாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் இறக்குமதி செய்யப்படும் பொருட்களான கச்சா எண்ணெய் பிரச்சனை குறிப்பாக ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடிய சந்தித்தாலும், இந்தியாவின் பொருளாதாரம், உயர்மட்ட பாதையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா ஜப்பான் ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழ்க்கைத்தரத்தை ஒப்பிடும் பொழுது நம் நாட்டிலும் அத்தகைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அளவிற்கு மக்களின் வாங்கும் சக்தியை நாம் உயர்த்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Input & Image courtesy: Dinamalar News