வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா: IT துறையில் பெருகும் வேலைவாய்ப்பு !
இந்தியா தற்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக IT துறைகளில் வேலைவாய்ப்புகள் பன் மடங்கு பெருகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதனால் பணியமர்த்தல் விகிதம் என்பது சற்று நிலையான வளர்ச்சியினைக் கண்டு வருகின்றது. மேலும் இந்த வளர்ச்சி குறித்து, லிங்க்ட் இன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் பணியமர்த்தல் செயல்பாடு என்பது சீராக மீட்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பணியமர்த்தல் விகிதம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட தற்பொழுது சுமார் 65% அதிகரித்துள்ளது.
மேலும் இந்த அமைப்பு இது குறித்து மேலும் கூறுகையில், முதல் மற்றும் இரண்டாவது கட்ட கொரோனா பரவல் காரணமாக பணியமர்த்தலில் மோசமான சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வேலை சந்தை பலரும் அந்த காலக்கட்டத்தில் வேலையினை இழந்து வந்தனர். எனினும் தற்போது அது சீரான நிலையை எட்டுவதற்கான அறிகுறி தற்போது ஏற்பட்டுள்ளது. பணியமர்த்தப்பட்ட துறைகளில் IT துறையானது முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து உற்பத்தி மற்றும் ஹார்டுவேர் துறைகளில் அதிகளவில் உள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தற்போது கண்டு வரும் இந்த வளர்ச்சி விகிதமானது இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொருளாதாரம் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. அதுவும் சற்று வலுவான வளர்ச்சியாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய பல வாய்ப்புகள் திறக்கப்படலாம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. கொரோனாவின் காரணமாக மக்கள் வேலைகளை பெறுவதில் பெரும் வீழ்ச்சி இருந்து வந்தது. 2020 ஏப்ரல் மாதத்தில் கிட்டதட்ட 48% சரிவு இருந்தது. ஆனால் தற்போது இந்த விகிதமானது குறைந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் வேலை வாய்ப்பு பெருகினாலேயே, அந்த நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதாகத் தான் அர்த்தம். அந்த வகையில் இந்த ஆய்வானது இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதை காட்டுகிறது.
Image courtesy:Theweek News