இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி: தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் முடிந்ததா ?

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி கடின உழைப்பாளிகளான தொழிலாளர்களின் முயற்சியால் முடிந்தது.

Update: 2021-09-25 13:12 GMT

நோய் தொற்றுக்கு பிறகு ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் தற்போது மீண்டும் பழைய நிலையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைவதற்கு காரணம் சுறுசுறுப்பான தொழிலாளர் குறியீடுகளை கொண்டது என்றும் எக்கனாமிக் டைம்ஸ் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. தடையற்ற பொருளாதாரத்தில் தொழிலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணி அதன் செயல்பாட்டு சுதந்திரம் ஆகும். அந்த வகையில் இந்தியாவில்  உள்ள தொழிலாளர்களின் சட்டம் மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. 


இந்தியாவின் பெரும்பாலான தொழிலாளர் சட்டங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு வடிவமைக்கப்பட்டன. அது முக்கியமாக உற்பத்தி மற்றும் விவசாயப் பொருளாதாரமாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள சூழலில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் பங்கு மற்றும் அவர்களுடைய உரிமைகள் காக்கப்பட பழைய சட்டங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தொழிலாளர் சட்டங்களை நிர்ணயிக்கும் பாதுகாவலர், முதன்மையாக தொழிலாளியின் தேவைகளையும், உரிமைகளையும் பூர்த்தி செய்யும் முதலாளி மற்றும் ஊழியர் உறவுகளின் பல்வேறு அம்சங்களை ஒழுங்குபடுத்தும் 40 க்கும் மேற்பட்ட பல்வேறு சட்டங்களை உருவாக்க வழிவகுத்தது. 


இந்தியாவில் இருக்கும் சட்டங்கள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதை விட வருமானம் மற்றும் வேலை பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தடை, ஊழியர்களின் பணிநீக்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் தொடர்பான கடுமையான சட்டங்கள் போன்ற விதிகளிலிருந்து இது தெளிவாகிறது. எவ்வாறாயினும், இந்தியாவின் தாராளமயமாக்கல் இயக்கம் சேவைத் துறையை மேம்படுத்துவதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்தின் மையத்தில் வைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவிகிதத்திற்கும் மேலான பங்களிப்பை தொழிலாளர்கள் வழங்குகிறார்கள். குறிப்பாக நோய் தொற்றுக்கு பிறகு இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மீட்சி தொழிலாளர்கள் மட்டுமே நடந்துள்ளது.    

Input & Image courtesy:Economic times



Tags:    

Similar News