இந்திய பொருளாதார வளர்ச்சி: வேலை வாய்ப்புகளின் நிலை என்ன ?

தற்பொழுது இந்திய பொருளாதார வளர்ச்சி மீண்டும் என்றால் வேலை வாய்ப்புகளில் நிலை என்னவாக இருக்கும்.

Update: 2021-09-03 13:56 GMT

இந்திய பொருளாதாரம் தற்போது உள்ள நோய் தொற்று காலத்தில், மீண்டு வருகின்றது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வந்தாலும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவாகத்தான் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டில் வேலையின்மை விகிதம் 8.32% உயர்ந்துள்ளது. இருந்தாலும் ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் இது அதிகம்தான் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்து உள்ளது.  


இது குறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் கூறுகையில், கடந்த ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.9% இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 8.32 சதவீதமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக கிராமப் புறத்தில் இந்த நிலைமை மேலும் அதிகரித்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், 10 லட்சம் பேர் ஆகஸ்ட் மாதத்தில் வேலையிழப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இருப்பினும், ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு தான். 


கடந்த ஏப்ரல் மாதத்தில் 70 லட்சம் பேர் வேலை இழப்புக்கு ஆளாகினர். வேலை வாய்ப்புக்கான சூழல், கடந்த சில ஆண்டுகளாகவே கடினமானதாக இருந்து வருகிறது. இதில் கொரோனா தாக்கம் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பொருளாதாரம் மீண்டு அடைந்து கொண்டிருக்கும் நிலையில், வேலைவாய்ப்புக்கான நிலமைகள் தற்பொழுது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குறிப்பாக ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில், வேலைவாய்ப்பின்மை விகிதம் இரட்டை இலக்க அளவில் உள்ளது. 

Input:https://www.livemint.com/economy/indias-unemployment-rate-climbs-urban-joblessness-close-to-10-in-august-11630497726558.html

Image courtesy:livemint



Tags:    

Similar News