520 பில்லியன் டாலர்களைச் சேர்க்கும் இந்திய பொருளாதாரம்: நிதி ஆயோக் திட்டவட்டம்!
வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரம் 9.2% வளர்ச்சி அடையும் என நிதி ஆயோக் CEO கருத்து தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்த் அவர்கள் நேற்று, "இந்தியப் பொருளாதாரம் 9.2% வளர்ச்சியடைந்து வருவதாகவும், வரும் ஆண்டுகளில் இதேபோன்ற விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் கூறினார். மேலும் மத்திய அரசின் தற்போதைய சோலார் பவர் பிளான்ட் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் உற்பத்தியில் 520 பில்லியன் டாலர்களைச் சேர்க்கும் மற்றும் இந்தியாவை உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாற்றும் என்று கூறியுள்ளார்.
நேற்று நடந்த அனைத்திந்திய மேலாண்மை சங்கம்(AIMA) நிகழ்வில் பேசிய நிதி ஆயோக் தலைமை நிர்வாகி, "இன்று இந்தியா முன்னோடியில்லாத அளவிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் மூலம் இயங்கி வருகிறது. பொருளாதாரம் 9.2% வளர்ச்சியில் உள்ளது மற்றும் வரும் ஆண்டுகளில் இதே போன்ற விகிதத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுகிறது" என்று அவர் கூறினார்.
நாட்டின் செயல்திறனை அதிகரிக்க பல நடவடிக்கைகள் GST மற்றும் கார்ப்பரேட் வரிகளை குறைத்தல் போன்ற பல சீர்திருத்தங்களை நாடு எடுத்துள்ளதாகவும் கூறினார். இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி சாம்பியன் மற்றும் உற்பத்தி மையமாக மாற்ற உதவும் என்றார். உள்கட்டமைப்பு சொத்து, நேஷனல் பைப்லைன் பாலிசி இவற்றின் ஒருங்கிணைந்த விளைவு, அரசு மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டின் பங்கேற்புடன் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்யும் என்று கூறினார்.
Input & Image courtesy: Livemint