5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு: இந்தியா என்ன செய்ய வேண்டும்?

5 டிரில்லியன் டாலர் இந்திய பொருளாதாரத்தை அடைய செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி ஆய்வின் முடிவு.

Update: 2022-01-31 13:23 GMT

மத்திய பட்ஜெட் 2022க்கு முன்னோடியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு முன்னேறியுள்ளது? என்பது குறித்த 'பொருளாதார ஆய்வு 2022' அறிக்கையை பட்ஜெட்டிற்கு முந்தையநாள் மத்திய அரசு வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார ஆய்வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்று, அடுத்த நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) கணிப்பு ஆகும்.


இந்த முறை, அடுத்த நிதியாண்டில் அதாவது 2022ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 9.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய, உள்கட்டமைப்பிற்காக இந்தியா இந்த ஆண்டுகளில் சுமார் ரூ.1.4 டிரில்லியன் செலவழிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வு கூறுகிறது. ஏர் இந்தியாவை தனியார்மயமாக்குவது, அதன் பங்கு விலக்கல் இலக்குகளுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு 'குறிப்பாக முக்கியமானது' என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு இது நிறைவேற்றப்பட்டது. இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீண்ட உரையுடன் குடியரசுத் தலைவர் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடங்கினார். உரையின் போது, ​​ மாண்புமிகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நோய் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தைப் பாராட்டினார். மேலும் இந்தியாவில் உள்ள கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்கும், நாட்டில் பெண்களின் நிலையை உயர்த்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் பாராட்டினார். பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னம்பிக்கையையும் அவர் எடுத்துரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News