இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி? தொழில்துறை அமைப்பு கருத்து !

பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் எப்படி? உள்ளது என்று தொழில்துறை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2021-08-07 13:08 GMT

பெரும் தொற்றுக்கு பிறகு மக்கள் சிறிது சிறிதாக தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில்களையும் தற்பொழுது கையில் எடுத்துள்ளார்கள். எனவே வரும் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு இருக்கும் தற்போது எதிர்நோக்கு இந்திய பொருளாதாரம் சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கான விளக்கத்தை தொழில்துறை அமைப்பு பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வளர்ச்சி வேகமெடுத்துள்ளதாக, தொழில் துறை அமைப்பு தற்பொழுது தெரிவித்துள்ளது. 


இது குறித்து இவ்வமைப்பு மேலும் கருத்துக் கூறுகையில், "கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து வருவதாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாலும், அரசின் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களாலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருந்த பாதிப்புகளிலிருந்து, பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது. இந்நிலையில், மக்களின் நுகர்வை அதிகரிக்கவும், தனியார் முதலீடுகளை அதிகரிக்கவும், அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


மேலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு, கூடுதலான நேரடி நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக உள்நாட்டு பொருளாதாரத்தில் தேவைகள் அதிகரித்து, பொருளாதாரம் இன்னும் வேகமான மீண்டு வருவதை காண முடிகிறது முன்பு இருந்ததைவிட தற்போது மக்கள் சுய தொழில்களில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் மூலமாக அவர்களுடைய குறைந்தபட்ச பொருளாதார நிலை உயர்வதற்கான வழி அவர்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்" என்று அவ்வமைப்பு கருத்தை தெரிவித்துள்ளது. 

Input:https://moderndiplomacy.eu/2021/08/05/gcc-countries-back-on-path-to-economic-growth-after-contraction-due-to-the-pandemic/

Image courtesy: Moderndiplomacy 


Tags:    

Similar News