தொற்று நோயில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறதா?
தற்போது நடந்த ஆய்வின் அடிப்படையில், இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதாக மக்கள் நம்பிக்கை.
இணைய நிதி சேவை நிறுவனம் ஒன்று நிதி சுதந்திரம் தொடர்பான ஆய்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதில் இந்தியாவில் உள்ள மக்கள் பலபேர் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் முதலீட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருவது ஆய்வில் கூறியுள்ளார்கள். இந்த ஆண்டு வெளியாகி உள்ள நிதி சுதந்திரம் ஆய்வு அறிக்கை முடிவில், பங்கேற்ற 60 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் முதலீட்டை தொடர்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் 38 சதவீதம் பேர், கொரோனா சூழலிலும் முதலீடு அளவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியர்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதை இந்த ஆய்வு உணர்த்துகிறது. மியூச்சுவல் பண்டுகள், வைப்பு நிதி மற்றும் பங்குகள் பிரபலமாக முதலீடு வாய்ப்புகளாக அமைகின்றன. அந்த வாய்ப்பை மக்கள் மிகவும் சரியாக பயன் படுத்துகிறார்கள். ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதி பேருக்கு மேல், முறையான நிதி திட்டமிடலை மேற்கொள்வதை இலக்காக கொண்டுள்ளனர்.
இதற்காக நிதி ஆலோசகரின் தொழில் முறை உதவியை நாடத் தயாராக இருப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 62 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வருவது தொடர்பாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மக்கள் தெரிவித்த இந்த நம்பிக்கையின் மூலம் நிச்சயம் மீண்டும் வருவோம்.
Image courtesy:the Hindu