இந்தியப் பொருளாதார பயணம்: மீண்டும் நினைவுபடுத்தும் குட்டிக்கதை!

இந்திய பொருளாதார பயணத்தில் தற்போது மெதுவாகவும், நிலையானதாகவும் இருப்பதே வெற்றியாளர்களாக உருவாக்குகிறது.

Update: 2022-09-14 01:15 GMT

இந்திய பொருளாதாரத்தில் வெற்றிப் பயணம் என்பது நம்முடைய நினைவுக்கு நாம் சிறுவயதில் பிடித்த கதை ஒன்றை நினைவுபடுத்துகிறது. இது குறித்து பினான்சியல் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, நாம் அனைவரும் சிறுவயதில் முயல் மற்றும் ஆமை கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். அதாவது முயல் மிக நீண்ட தூரத்தை எளிய நொடியில் கடந்து விடும். ஆனால் ஆமை மெதுவாகவும், நிதானமாகவும் அந்த போட்டியில் பங்கேற்கும் ஆனால் கடைசியில் ஆமையானது தன்னுடைய மெதுவான மற்றும் நிலையான பாதையை நோக்கி பயணித்த பயணம் காரணமாக வெற்றி இலக்கை அடைந்தது. அதேபோல இந்தியாவும் தற்போது தன்னுடைய வெற்றி இலக்கை நிலையானதாக எட்டி கொண்டாடி கொண்டிருக்கிறது.


பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய அமெரிக்கா போன்ற நாடுகள் நாம் வளர்ச்சி அடையும் நாடுகள் என்று நோக்கில் நம்மை பல வழிகளில் மிகவும் குறைவான வளர்ச்சி கொண்ட நாடாகவே பார்க்க வந்தது. பல வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு நம்முடைய வெற்றி கதையை சொல்லிக் கொண்டிருக்கும் தருணம் தான் இது. ஏனெனில் இந்தியா உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது, பல நாடுகளின் புருவங்களை தூக்கிப் பார்க்க வைத்துள்ள ஒரு செயல்.


2014 ஆம் ஆண்டிற்கு பிறகு மோடி அவர்களின் தலைமையில் கீழ் வலுவான நிர்வாகம் மற்றும் நிலையான கொள்கையின் காரணமாக இந்திய பொருளாதாரம் மாறி வருகின்றது. இது ஒரு மெதுவாக ஆனால் நிலையான வளர்ச்சி கொண்ட புதிய இந்தியாவாக நம்மை உருவாக்க இருக்கிறது என்பதற்கு நம்முடைய வளர்ச்சியை ஒரு பெரிய உதாரணம். ஆகஸ்ட் 2022 இன் இறுதியில், இந்தியா MSCI வளர்ந்து வரும் சந்தைக் குறியீட்டில், சீனாவுக்கு அடுத்தபடியாக 14% க்கும் அதிகமான எடையுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

Input & Image courtesy: Financial Express

Tags:    

Similar News