பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் - உலக அளவில் உயர்ந்த பங்கு சந்தைகள்
பிரிட்டனியில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரதமர் ஆவார் என உறுதியானதை அடுத்து பங்கு சந்தைகள் உலக அளவில் உயர்வாக காணப்பட்டு வருகின்றன.
பிரிட்டனியில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பிரதமர் ஆவார் என உறுதியானதை அடுத்து பங்கு சந்தைகள் உலக அளவில் உயர்வாக காணப்பட்டு வருகின்றன.
பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்க உள்ள நிலையில் அவர் பிரதமராக வருவதை உறுதியானதால் உலகளாவிய பங்குகள் மற்றும் பிரிட்டன் பவுண்டு மதிப்பு உயர்ந்துள்ளது.
பிரிட்டன் மற்றும் ஜெர்மனையில் பொருளாதாரம் மந்தமாக இருந்தபோதிலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. ஐரோப்பிய எரிவாயு விலை ஜூன் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக வெகுவாக குறைந்தது. பிரிட்டன் பொருளாதாரத்தை ரிஷி சுனக் மாற்றுவார் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.