பொருளாதாரத்தை அதிகரிக்க மக்கள் முதலீடு தேவை: நிபுணர்கள் கருத்து!
இந்திய பொருளாதாரத்தை அதிகரிக்க மக்கள் முதலீடு இந்த ஆண்டு தேவை.
கடந்த ஆண்டுகளில் நோய்த்தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் தங்களுடைய பணத்தை எந்த ஒரு திட்டங்களிலும் முதலீடு செய்யாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு போல் இல்லாமல் தற்போது வரும் ஆண்டுகளில் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு, மக்கள் தங்களுடைய பணத்தை பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்திற்காக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து கூறி உள்ளார்கள். 2022 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என்றாலும், இந்தியாவில் பணவீக்கம் அதிகம் கவலையை ஏற்படுத்தாது என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும் தற்பொழுது உருமாறி உள்ள ஓமிக்ரான் ஒரு பெரிய இடையூறு ஏற்படுத்தவில்லை என்றால், பங்குகள் நன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் பங்குகளில் உள்நாட்டு சில்லறை விற்பனை FPI வெளியேற்றத்தை விட வலுவாக உள்ளது. அரசாங்கப் பத்திரங்கள் மீதான வட்டி விகிதங்கள் அதிகமாக பெற தொடங்கியுள்ளது. செப்டம்பர் 22 அன்று 6.1 சதவீதமாக இருந்த சமீபத்திய குறைந்த அளவிலிருந்து வியாழன் அன்று 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள மத்திய வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கி விலகி, ஒரு நிலைப்பாட்டை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்து, மூலதனத்தின் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் சந்தை வட்டி விகிதங்களை உயர்த்துகிறது.
மிகப் பெரிய அரசுக்குச் சொந்தமான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(SBI), இந்த மாத தொடக்கத்தில் அடிப்படை விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகளால் ஆண்டுக்கு 7.55 சதவீதமாக உயர்த்தியது. சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வரும் அன்னிய நேரடி முதலீடுகளின் பயனாளியாக இந்தியா இருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும் பல தனியார் பங்கு முதலீட்டாளர்கள் மற்றும் பிற நிதிகளை இந்தியாவில் தங்கள் முதலீடுகளை அதிகரித்துள்ளன.
Input & Image courtesy:Indianexpress