அனைத்து வைரஸ்களை எதிர்க்கும் தடுப்பூசி: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

கொரோனாவின் அனைத்து வகையான உருமாறிய வைரஸ்களை எதிர்க்கும் தடுப்பூசி இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.

Update: 2022-02-07 13:47 GMT

இந்திய பொருளாதாரம் தற்போது நல்ல நிலையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறது மேலும் நோய்தொற்று ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து சிறிதுசிறிதாக தற்பொழுது மீள ஆரம்பித்துக் கொண்டு இருக்கிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பு ஏற்படுத்திய மாற்றத்திற்குப் பிறகும் இத்தகைய நிலையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இந்திய விஞ்ஞானிகள் அனைத்து வகையான கொரோனாவின் உருமாறிய வைரஸ்களை அழிக்கும் வகையில் ஒரு புதிய தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளார்கள்.  


இதன் மூலம் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் நிகழும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் மற்றும் மற்ற உலக நாடுகள் கண்டுபிடிக்காத இந்த செயலுக்கு இந்தியாவிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உலகின் மற்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அனைத்து வகையான வைரஸ் மாதிரிகளை எதிர்க்காது. ஆனால் தற்போது இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி அனைத்து வகையான உருமாறிய வைரஸ்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. இது தடுப்பூசி செலுத்தியவர்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த தடுப்பூசி TLR4 என்று புரிந்த வகைகளையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் இதன் காரணமாக, தற்பொழுது ஏற்பட்டிருக்கும் Omicron போன்ற வகைகளையும் எதிர்க்கும் தன்மை கொண்டது. மேலும் இந்த தடுப்பூசி செலுத்தியவர்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதும் ஆய்வு முடிவில் தெளிவாக்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்களை கூறி உள்ளார்கள். 

Input & Image courtesy: Economic times

Tags:    

Similar News