இந்த விஷயத்தில் இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !
சமீபத்தில் நடத்திய ஆய்வில் வெளியாகிய தகவலின்படி இந்த விஷயத்தில் மட்டும் இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் சைபர் தாக்குதல் மூலம் பல பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டேட்டா திருட்டு, ஹேக்கிங், செல்போன் ஹேக் செய்தல் என பல பிரச்சனைகள் ஏராளமாக இருந்தும் வருகின்றன. இதற்கிடையில் சமீபத்தில் நடை நடைபெற்ற ஆய்வு ஒன்றில் முடிவு தற்பொழுது வெளியாகி உள்ளது. இதில் அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 11% பேர் தங்களது மொபைல் போன்களில், நிதி ரீதியிலான முக்கிய தகவல்களை சேமித்து வைத்துள்ளனராம். இதன் காரணமாக மூன்றில், ஒருவர் செய்யும் தவறு இது தான்.
மேலும் இதில் கவலை தரும் விஷயம் என்னவெனில் மூன்றில் ஒரு இந்தியர், வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், ATM பின் நம்பர்கள், ஆதார் கார்டு, பான் எண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை தங்களது மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர்கள், மெயில்களில் சேமிக்கின்றனர் என லோக்கல் சர்கிள்ஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வு கூறுகின்றது. தற்போதைய காலகட்டத்தில் சாதாரணமாக நீங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சம் சார்ந்த ஒரு ஆப்பினை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்தாலே, உங்களது மொபைலில் உள்ள தொடர்பு பட்டியலில் உள்ள விவரங்கள் அணுகலை கேட்கிறது.
அப்படியிருக்கும் பட்சத்தில், இது மிக ஆபத்தான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு தனி நபரின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு அங்கீகரிக்கப்படாத அணுகல் மூலம் மோசடி நடைபெறுவது பயனர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளதாக கூறியுள்ளது. நிதி ரீதியிலான விவரங்களை, ஆவணங்களை இப்படி சேமித்து வைப்பது என்பது மிக ஆபத்தான ஒரு விஷயம்தான். ஆக உங்களது தகவல்கள் திருட்டு போவதற்கு நீங்களே முக்கிய காரணமாக அமையலாம். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முன் கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Input & image courtesy:The Hindu