தடுப்பூசி பாதையில் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: ஐ.நா கருத்து!

தடுப்பூசியின் வலுவான பாதை காரணமாக இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது ஐக்கிய நாட்டு சபை கருத்து.

Update: 2022-01-14 14:23 GMT

2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று தற்பொழுது கணிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்கும் மத்தியில் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றின் இடையில் இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டும் வந்திருப்பதை ஐக்கிய நாட்டு சபை நினைவுகூர்ந்து உள்ளது. எண்ணெய் விலை உயர்வு காரணமாக பொருளாதாரம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஐக்கிய நாட்டு சபை உலகப் பொருளாதாரத்தை குறித்து தன்னுடைய அறிக்கையை நேற்று சமர்ப்பித்துள்ளது. கடந்த ஆண்டைவிட ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சி தற்பொழுது குறைவதற்கான வாய்ப்பை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.


2021 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 2022 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி 6.5 சதவீதமாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வர இருக்கும் அடுத்த ஆண்டில் குறிப்பாக 2023-ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா சபை அறிக்கையில் தெரிவித்துள்ளது. தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 


இந்தியாவில் 2022ம் ஆண்டில் பணவீக்கம் முன்பு இருந்ததை விட பெருமளவில் குறையும் என்றும் கூறப்படுகிறது. நோய்தொற்று பெருமளவு, மக்கள் பொருளாதாரத்தில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பணவீக்கம் உணவு விலைவாசியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மாறுபாடு அடைந்த பெரும் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில், பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Input & Image courtesy:Economic times


Tags:    

Similar News