வேற லெவலில் வளரும் இந்தியா பொருளாதாரம் - இந்தியாவின் ஏற்றுமதி ஜனவரியில் எவ்வளோ உயர்ந்திருக்கு தெரியுமா?

ஜனவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 36.76 சதவீதம் அதிகரித்து 61.41 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

Update: 2022-02-15 14:44 GMT

2022 ஜனவரியில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, சரக்கு மற்றும் சேவைகள் இணைந்து  $61.41 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பதிவானதை விட 36.76 சதவீத அதிகமாகும்.

அதே போல ஜனவரி 2020 இல் பதிவானதை விட 38.90 சதவீதம்  அதிகம் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல்-ஜனவரி 2021-22ல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி $545.71 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 37.68 சதவீத வளர்ச்சியையும், ஏப்ரல்-ஜனவரி 2019-20ஐ விட 23.29 சதவீதம் அதிகமாகும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், ஜனவரி 2022 இல் ஒட்டுமொத்த இறக்குமதிகள் $67.76 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 30.54 சதவீத மெதுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜனவரி 2020 ஐ விட 30.19 சதவீத நேர்மறையான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

மேலும், ஏப்ரல்-ஜனவரி 2021-22 இல் ஒட்டுமொத்த இறக்குமதிகள் $616.91 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 54.35 சதவீத வளர்ச்சியையும், ஏப்ரல்-ஜனவரி 2019-20ஐ விட 20.15 சதவீத வளர்ச்சியையும் காட்டுகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. .

Tags:    

Similar News