மெல்ல மெல்ல சீன பொருட்களின் இறக்குமதியை விரட்டியடிக்கும் இந்தியா! கடந்த 3 ஆண்டுகளாக நாம அவங்களுக்கு கொடுத்திருக்கோம்!
indias-exports-to-china-rise-by-21-per-cent-to-usd-229-billion-in-202
2021ஆண்டில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 21 சதவீதம் அதிகரித்து 22.9 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதே ஆண்டில் இறக்குமதி 49 சதவீதமாக குறைந்து 87.5 பில்லியன் டாலராக உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2020 இல் 77.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2021-இல் இது 110.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. ஆண்டுக்கு 42.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2019 தரவுகளுடன் ஒப்பிடும் போது , 2021ல் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 33.9 சதவீதம் உயர்ந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் இருந்தபோதிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து உயர்ந்துள்ளது .
சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2019ல் 17.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2020ல் 19 பில்லியன் டாலராகவும், மேலும் 2021ல் 22.9 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது.
சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 2019ல் 68.4 பில்லியன் டாலராக இருந்து 2020ல் 58.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், அமெரிக்காவுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகம் 90.1 பில்லியன் டாலர்களாகும். இது மொத்த வர்த்தகத்தில் 11.1 சதவிகிதமாகும். 12சதவீத பங்குடன், 2020ல் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா ஆனது. அதேசமயம் அமெரிக்காவின் பங்கு 11.7 சதவீதமாக இருந்தது.
2021 ஆம் ஆண்டில், 112.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியுடன் இந்தியாவின் வர்த்தகப் பங்குதாரராக அமெரிக்கா மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது, அதே ஆண்டில், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 110.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.