பிரதமரின் கதி சக்தி திட்டம்: இனி மின்சார சார்ஜ் ஏற்று வசதியுடன் நெடுஞ்சாலைகள்!

வாகனங்களுக்கு மின்சார சார்ஜ் ஏற்றும் வசதியுடன் ஏன் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று நிதின் கட்கரி அறிவிப்பு.

Update: 2022-09-14 01:16 GMT

டெல்லியில் இந்தோ- அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்து நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்கள் மின்சாரத்தில் இயக்க வேண்டும் என்று மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது. அந்த மின்சார வாகனங்களுக்கு சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகிய சார்ஜ் ஏற்றும் மையங்கள் உருவாக்குவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து சோலார் மின்சார சப்ளைகளுடன் நெடுஞ்சாலைகள் அமைத்து வருகிறோம்.


அந்த சாலைகள் ஆகாயம் மார்க்கமாக மின்வழி பாதை செல்லும் அத்தகைய சாலைகள் வழியாக செல்லும் கனரகமாக லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மின்சார மின்சார ஜார்ஜ் ஏற்றி கொள்ளலாம். சுங்க சாவடிகளிலும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி இயக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். நன்கு கட்டமைக்கப்பட்ட உள் கட்டமைப்பு வசதிகளால் பொருளாதார கட்டமைப்புகள் பெருகும் வர்த்தகம் அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பும் பெரிதும். பிரதமரின் கதி சக்தி திட்டத்தினால் மக்களுக்கு விரைவில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும்.


நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் பொழுது விரிவாக்கம் செய்யும் பொழுது மரக்கன்று நடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். சுமார் மூன்று கோடி மரக்கன்றுகள் தேசிய நெடுஞ்சாலை ஊழியர்களால் நட போகிறோம். தேசிய நெடுஞ்சாலையை அமைக்கும் பொழுது இதுவரை 27 ஆயிரம் மரக்கன்றுகள் அகற்றப்பட்டு வெற்றிகரமாக வேறு இடங்களில் தற்போது நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News