IPO வெளியிட இருக்கும் இரண்டு பெரிய நிறுவனங்கள்: சிறு முதலீட்டாளர்களுக்கு நன்மையா?
IPO வெளியிட இருக்கும் 2 பெரிய நிறுவனம் காரணமாக சிறு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு அமைய உள்ளது.
பங்கு சந்தைகளில் பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து, பல புதிய பங்குகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக வரும் வாரத்திலும் 2 நிறுவனங்கள் தங்களது பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளன. கோ பேஷன் நிறுவனத்தின் IPO, இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடானது நவம்பர் 17 அன்று தொடங்கி நவம்பர் 22 அன்று முடிவடையவுள்ளது. தார்சன் புராடக்ஸ் நிறுவனம் இந்த IPO மூலம் 1,024 கோடி ரூபாய் நிதியினை திரட்ட உள்ளது.
மற்றொரு நிறுவனம் தார்சன் புராடக்ஸ், இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடானது நவம்பர் 15 அன்று தொடங்கவுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு நவம்பர் 17 அன்று முடிவடையவுள்ளது. இதில் புதிய பங்கு வெளியீடாக 150 கோடி பங்குகளும், 1.32 பங்குகள் பங்குதாரர்களிடம் இருந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது. கோ பேஷன் நிறுவனத்தின் நிதி திரட்டல் இதே கோ பேஷன் நிறுவனம் 1,014 கோடி ரூபாய் நிதியினை திரட்ட உள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் கோ பேஷன் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு சொந்தமான 1.29 கோடி பங்குகளையும் விற்பனை செய்யவுள்ளது.
கோ பேஷன் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு விலையானது 655 - 699 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பங்கு வெளியீடு மூலம் திரட்டப்படும் நிதியினை 120 பிரத்யேக விற்பனையகங்களை தொடங்கவுள்ளது. மேலும் வணிக விரிவாக்கத்திற்காகவும், செயல்பாட்டு மூலதனமாகவு பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தார்சன் புராடக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை நிர்ணயம் 635-662 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Input & Image courtesy:Economic times