ஜன்தன் கணக்கு அதிகம் உள்ள மாநிலங்களில் குற்றம் குறைவு: SBI அறிக்கை !
ஜன்தன் கணக்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில் குற்ற விகிதங்கள் குறைவாக உள்ளதாக SBI தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டமான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் நாட்டின் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் குற்ற விகிதத்தையும் குறைக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி(SBI) நடத்திய ஆய்வுகளின்படி, ஜன்தன் கணக்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில் குற்றச் செயல்கள் மற்றும் மது மற்றும் புகையிலை பொருட்களின் நுகர்வு விகிதம் குறைந்துள்ளது.
SBI-இன் ஆராய்ச்சியின் முடிவு படி, ஜன்தன்-ஆதார்-மொபைல் (JAM) இணைப்பதன் மூலமாக அரசாங்க மானியங்களை திறமையாக வழங்க அனுமதித்துள்ளது. கிராமப்புறங்களில் மது மற்றும் புகையிலை நுகர்வு குறைக்கவும் இது உதவியுள்ளது. மேலும், பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY) கணக்குகளின் எண்ணிக்கை மற்றும் கணக்கு இருப்புக்கள் அதிகரித்துள்ளதால் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
SBI ஆய்வின்படி, "நிதி உள்ளடக்கிய அளவீடுகளில் இந்தியா இப்போது சீனாவை விட முன்னணியில் உள்ளது. இருப்பினும், கிளை அல்லாத BC மாதிரி இடங்களில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து இடங்களிலும் இந்த கணக்கில் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. நிதி உள்ளடக்கத்தில் முன்னணியில் இருந்தாலும், அனைத்து வங்கிகளும் வழங்கும் உள்கட்டமைப்பில் சமநிலை இல்லாததால், PSBகள் இப்போது பரிமாற்றக் கட்டணங்களை நிகரமாக செலுத்துகின்றன. இந்த ஒரு பிரச்சனை மட்டும் தான் இருக்கிறார்கள் ஆனால் இதை தவிர இதில் ஏராளமான நன்மைகள் இருப்பதால் ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருக்கும் மாவட்டங்களில் குற்றம் குறைவாக நடக்கிறது" என்று அறிக்கை முடிவில் கூறியுள்ளது.
Input & Image courtesy:MSN news