MGNREGA கீழ் பணிக்கான தேவையில் உயர்வு- கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்!
கிராமப்புற வளர்ச்சி அமைச்சகம் திங்களன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்ட போதிலும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் MGNREGA கீழ் வேலைவாய்ப்பு தேவை அதிகரித்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தொற்று காலத்தில், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் உள்ளவர்கள் முன்னணியில் செயல்படுத்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மே மாதம் வரை 1.85 கோடி மக்களுக்கு வேலை வழங்கப்படுவது, இதே காலகட்டத்தை 2019யில் ஒப்பிடும் போது 1.22 கோடியாக இருந்தது எனவே இது 52 சதவீதம் அதிகமாக உள்ளது கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.
2019 இல் எந்த தொற்றும் இல்லாததால் அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. "மே 13 2021 நிலவரப் படி, 2.95 கோடி நபர்களுக்கு இந்த நிதியாண்டில் வேலை வாங்கப்பட்டுள்ளது, 5.98 சொத்துகளைப் பூர்த்தி செய்துள்ளன. முன்னணியில் செயல்படும் நபர்கள் உட்படத் தொற்றுநோய் காரணமாக ஊழியர்களின் இறப்பு இருந்தாலும் இது அடையப்பட்டுள்ளது," என்று அமைச்சகம் தெரிவித்தது.
கிராமப்புறங்களில் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியானது DAY-NRLM கீழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2.5 கோடி மகளிர் சுயவுதவி குழு உறுப்பினர்களுக்கு CRP பயிற்சியளித்து உள்ளதாக அது தெரிவித்தது
"கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கிராமப்புறங்களைப் பாதித்துள்ள போதிலும், நாடுமுழுவதும் உள்ள மேம்பாட்டுப் பணிகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் உறுதி செய்துள்ளது," என்றும் அது தெரிவித்தது.
Source: https://economictimes.indiatimes.com/news/economy/indicators/demand-for-mgnrega-work-rises-ministry-data/articleshow/82715134.cms?UTM_Source=Google_Newsstand&UTM_Campaign=RSS_Feed&UTM_Medium=Referral