இந்தியா அமெரிக்கா இடையிலான டிஜிட்டல் வரி: OECD ஒப்பந்தம் இறுதியானது !

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீதாக விதிக்கப்படும் சரிநிகர் வரி இந்திய மற்றும் அமெரிக்க அரசு 2 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

Update: 2021-11-25 13:33 GMT

பன்னாட்டு நிறுவனங்கள், இ-காமர்ஸ் சேவை நிறுவனங்கள் மற்றும் நாடுகள் மத்தியிலான டிஜிட்டல் பரிமாற்றங்கள் மீது 2 சதவீத சரிநிகர் வரி விதிக்க இந்தியா மற்றும் அமெரிக்கா அரசு மத்தியில் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவுடன் அக்டோபர் 21ஆம் தேதி பிரிட்டன், ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சேவைகள் மத்தியில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஒத்துத் தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா அரசு மத்தியில் 2 சதவீத சரிநிகர் வரி விதிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.


இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய அரசு மார்ச் 31, 2024 வரையில் 2 சதவீத சரிநிகர் வரி விதிக்கும் அல்லது OECD ஒப்பந்தம் படி பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் நாடுகள் மத்தியிலான டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து எடுக்கப்பட்ட விதிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா, இந்தியா மீது விதித்த வர்த்தக வரி விதிப்பு அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும். இதோடு இது தொடர்பாக அமெரிக்கா எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதையும் இரு நாடுகள் மத்தியிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதுகுறித்து நிதியமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியா அமெரிக்கா அக்டோபர் 21ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை ஏற்றுத் தற்போது 2 சதவீத சரிநிகர் வரி விதிக்க அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் மத்தியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:NDTV news


Tags:    

Similar News