பசுக்கள் காப்பகத்தை ஆய்வு செய்யும் நிதி ஆயோக்: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம்!
இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, பசுக்கள் காப்பகத்தை ஆய்வு செய்ய நிதி ஆயோக் முடிவு.
இந்தியாவிலும் மற்றும் வெளிநாட்டிலும் பசுக்கள் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஏற்படும் வணிகத்தின் லாபம் அதிகமாக இருப்பதை தற்பொழுது நிதி ஆயோக் உணர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்போது இயற்கை விவசாயம் மற்றும் பசுக்கள் காப்பகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தற்போது களம் இறங்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக நிதி ஆயோக் தற்பொழுது ஒரு குழுவை அமைத்து இது தொடர்பான வரைபடத்தை தற்போது அமைத்து வருகின்றது. மேலும் இது தொடர்பாக நிதி ஆயோக்கின் உறுப்பினர் ரமேஷ் சந்தா கூற்றுப்படி, "ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் உள்ள பிற பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பெரிய பசுக்கள் காப்பகத்தில் பார்வையிட்டு மதிப்பீடு செய்து, புதிய வரைபடத்தை தற்போது குழு உருவாக்கி கொண்டிருக்கிறது"என்று கூறினார்.
மேலும் பசுக்கள் மூலம் கிடைக்கும் பொருட்களான சாணம், கோமியம், போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வணிகப் பொருட்கள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மதிப்பு மிக்கதாக உள்ளது. இதன் காரணமாக தற்போது இயற்கை விவசாயத்தையும் அபரிமிதமான லாபத்தை உருவாக்க முடியும் என்பதும் உணரப்பட்டுள்ளது. கால்நடைகளின் பொருளாதார திறன் மற்றும் பசு காப்பகம் உள்ளிட்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்த நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
எல்லா வகையிலும் உதவும் பசுக்கள் அதனுடைய பால் சுரக்கும் தன்மை குறைந்த உடன் அது தேவையற்ற ஒன்றாக கருதப்படுவது பொதுவான வழக்கம். ஆனால் பால் உற்பத்தி குறைந்த அளவில் அதன் பின்னர் பசுக்கள் உடைய பொருட்கள் குறிப்பாக பசுக்களன் கோமியம் மற்றும் அவற்றின் சாணம் பெருமளவில் பல்வேறு துறைகளுக்கு உதவுகிறது. மருத்துவத் துறைகளில் சில மருந்துகளுக்கு மாட்டின் கோமியம் பயன்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த வகையில் விவசாயிகள் கால்நடைகளை வளர்ப்பதற்கும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் இந்தியாவில் முன்னணி மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. இதே மாதிரி மற்ற மாநிலங்களும் பசுக்கள் பாதுகாப்பு மையங்களை உருவாக்குவதன் மூலமாக அதன் பொருளாதாரத்தை பெருமளவில் உயர்த்த முடியும் என்பதை நிதி ஆயோக் கூறியுள்ளது.
Input & Image courtesy: Economic times