உக்ரைன்- ரஷ்யா போர்: பாதிக்கப் படும் இந்திய மருந்து பொருட்களின் ஏற்றுமதி!
உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு முறையும் பொருளாதாரத்தின் இருப்பையும் அதன் முழு வளர்ச்சியையும் பாதிக்கும் விதமாக தற்போது உள்ள சூழ்நிலையில் அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்படுத்தியுள்ளது. எனவே இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர் காரணமாக அமெரிக்கா போன்ற பல்வேறு பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் ரஷ்யாவின் மீது தற்போது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகள் பல்வேறு நாடுகளையும் பாதிப்புக்குள்ளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இந்தியா மருந்து பொருட்களின் ஏற்றுமதியில் மிகப்பெரிய நாடாக இருந்து வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள் குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன ஆனால் தற்போது அங்கு நடக்கும் பதட்டமான சூழ்நிலை களுக்கு இடையில் இந்த மருந்து பொருட்களின் ஏற்றுமதி மிகவும் பாதிப்பை அடைந்துள்ளதாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய நிறுவனமான சன் பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பாக அங்கு இரு நாடுகளிலும் இருக்கும் தங்களுடைய பிரதிநிதிகள் நடந்து வரும் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், "விரைவில் ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம் என்றும், தற்போது நடந்து கொண்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை முடிவுக்கு வரவே அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள்" என்றும் கூறுகிறார்கள். ஏற்கனவே வர்த்தகப் பிரிவில் உள்ள மருத்துவ ஏற்றுமதி கவுன்சில் கருத்துப்படி, கடந்த ஆண்டு 591 டாலர்கள் மதிப்பிலான மருந்துகளை ரஷ்யாவிற்கும், 189 டாலர்கள் மதிப்பிலான மருந்துப் பொருட்களை உபயோகிக்கும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த வகையில் தற்பொழுது இந்த ஆண்டும் இந்த ஏற்றுமதி நடைபெறுமா? என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Input & Image courtesy: Economic times