அடுத்த 25 வருடங்களுக்குள் இந்திய பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் : பிரதமர் உரை !
முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய பொருளாதாரத்தில் வருடங்கள் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறினார்.
இன்று குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். அப்போது, பழைய வாகனங்களைக் கழித்துக் கட்டும் தேசியக் கொள்கையையும் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சுதந்திரத்தின் 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் நம் வாழ்க்கை முறை, தொழில் வணிகம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்படும்.
அந்த சமயத்தில் சுற்றுச்சூழல், நிலம், வளங்கள் ஆகியவற்றைக் காப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தொழில்நுட்பம், புதுமையை புகுத்துவதை எதிர்காலத்திலும் நிகழ்த்த முடியும். ஆனால், இயற்கை வளங்களை பூமித்தாயிடம் இருந்தே பெற முடியும். நீடித்த வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டும். மக்களின் நலனுக்காக, பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது முக்கியத்துவத்தில் உணர்ந்தால் மட்டும்தான் ஒரு நாட்டின் வளர்ச்சி நிச்சயமாக ஏழுமுக வளர்ச்சியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழலுக்கும் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்முடைய பொருளாதாரத்தை வழிநடத்தி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி பேசினார்.
Image courtesy:indian express