PM-KISAN திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் 55 லட்ச விவசாயிகள் 985.61 கோடி பெற்றனர்!

Update: 2021-05-14 13:50 GMT

இன்று பிரதமர் கிசான் திட்ட நிதியின் கீழ் இந்த ஆண்டிற்கான முதல் தவணை நிதியைப் பிரதமர் வீடியோ கான்பிரென்ஸ் மூலம் வெளியிட்டார். மேலும் இந்த திட்டத்தில் கர்நாடகாவில் 55 லட்ச விவசாயிகள் 985.61 கோடியைப் பெற்றுப் பயன்பெற்றுள்ளனர் என்று முதலமைச்சர் B S எடியூரப்பா தெரிவித்தார்.


பிரதமர் நரேந்திர மோடி PM-KISAN நிதி திட்டத்தின் கீழ் நிதியை இன்று வீடியோ கான்பிரென்சிங் மூலம் வெளியிட்டார். இதில் எடியூரப்பாவும் கலந்து கொண்டார்.

"விவசாயிகளுக்குப் பயனளிக்கும் விதமாக இன்று பிரதமர் கிசான் நிதியின் கீழ் நிதியை வெளியிட்டார். கர்நாடக மாநிலத்தில் 55 லட்ச விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 985.61 கோடியை தங்கள் வங்கிக் கணக்குகளில் பெற்றனர்," என்று வீடியோ கான்பிரென்ஸ் முடிந்த பிறகு எடியூரப்பா டிவிட் செய்திருந்தார்.

மாநில அரசாங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, இந்த தவணை நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 55.06 விவசாய குடும்பங்கள் பயன்பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 2019 முதல் மார்ச் 2021 வரை 55.06 விவசாய குடும்பங்கள் மொத்தமாக 6,936.98 கோடியை இந்திய அரங்கத்திடம் இருந்து பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ளது இந்த நிதியாண்டிற்கான முதல் தவணை நிதியாகும்.


அனைத்து மாநிலங்களையும் விட, கர்நாடக ஆதார் செயல்படுத்தப்பட்ட பரிவர்த்தனையை அதிக சதவீதம் செய்துள்ளது என்றும் அது குறிப்பிட்டது.

Source: https://economictimes.indiatimes.com/news/economy/agriculture/over-55-lakh-karnataka-farmers-receive-a-total-of-rs-985-61-cr-under-pm-kisan-scheme/articleshow/82631543.cms

Similar News