பிரதமர் மோடி தலைமையிலான அரசு 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட முதன்மை திட்டங்கள்!
பிரதமர் மோடி தலைமையிலான அரசு எட்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 8 முதன்மையான திட்டங்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு வருகின்ற மே 26 தேதியுடன் எட்டு ஆண்டுகள் முடிவடைய உள்ளன. எனவே இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது. எனவே எட்டு ஆண்டுகளில் அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம். இந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி அவர்களுடைய அரசாங்கம் இந்தியாவில் நீதி பாதையிலும் நேர்மையான வழியிலும் கொண்டு செல்வதற்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த உதவியது.
மேலும் இது தொடர்பாக பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இது பற்றிக் கூறுகையில், "பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசு கடந்த எட்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் சாதனைக் உரியதாக இருந்துள்ளது மற்றும் எட்டு ஆண்டுகளில் செய்து நல்லாட்சி மற்றும் ஏழை மக்களின் நன்மைக்காக அர்ப்பணிக்கப் பட்டவை என்பதை அவர் குறிப்பிட்டார். எனவே எட்டு ஆண்டுகளில் விவசாய முதல் விண்வெளித் துறை வரை பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றுள் முதன்மையானது ஆயூஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் அரோக்கிய யோஜனா (PM-JAY) ஆயுஷ்மான் பாரத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. உலகிலேயே அரசாங்க பங்களிப்போடு செயல்படும் மிகப்பெரிய சுகாதார திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
மேலும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உதவியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்ததாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் ஏழை பயனாளிகளுக்கு சேரவேண்டிய நிதி தொகை அவர்களுடைய வங்கி கணக்கிலேயே டெபாசிட் செய்வது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயி குடும்பங்களுக்கு மூன்று தவணைகளில் 2000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், முத்ரா யோஜனா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் முதன்மை வகிக்கின்றது.
Input & Image courtesy: News 18