மத்திய அரசின் PM.ஸ்ரீ யோஜனா - பயனடையப்போகும் 14,500 பள்ளிகள்!

பிரதான் மந்திரியின் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் பிரதமர் மோடி அறிவிப்பு.

Update: 2022-09-07 02:56 GMT

பிரதான் மந்திரியின் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பள்ளிகள் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள சுமார் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று அறிவித்தார். நேற்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் இருந்த 45 ஆசிரியர்களுக்கான நல்லாசிரியர் விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார். பின்னர் மாலையில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை சந்தித்து பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்தி பேசினார்.


ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்தியாவில் 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்விக் கொள்கையானது தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவின் கல்வியின் தரம் உயர்த்தப்படும் என்று நோக்கில் மத்திய அரசு இதனை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதான் மந்திரி எழுச்சிமிகு இந்தியாவிற்கான பள்ளிகள் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து 14 ஆயிரத்து 500 பள்ளிகள் பயன் பெற உள்ளன.


இந்த பள்ளிகள் அனைத்தும் தற்போது உள்ள புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்படும். மேலும் அனைத்து பள்ளிகளும் மேம்படுத்துவதற்கான ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வசதிகள், இணைய வசதியுடன் கூடிய கணினி வகுப்புகள், டெமோ கிளாஸ் வகுப்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் தற்போது உலக அளவில் ஐந்தாவது இடத்தில் முன்னேறி இருக்கின்றது. 250 வருடங்கள் நம்மை அடிமைப்படுத்தி இருந்தவர்களை நாம் தற்போது முன்னேறி ஐந்தாவது இடத்தில் வந்து இருக்கிறோம் என்றும் அவர் கூறினார். 

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News