முதலீட்டாளர்களிடம் பிரபலமாக உள்ள போஸ்ட் ஆபிஸ் திட்டம்: அதிகமான முதிர்வு தொகை

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு காலத்தில் ரூ.6,94,746 ஆக இருக்கும்.

Update: 2022-04-20 01:24 GMT

கொரோனாவுக்கு பிறகு முதலீடு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்திய பொருளாதார அளவில் பெருமளவு செலவு ஏற்பட்டாலும் மக்கள் தங்கள் முதலீட்டில் தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளார்கள். வருங்காலத்திற்காக இன்றைய சேமிப்பு பழக்கம் தான் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது எனவே இன்றே உங்கள் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அது வருங்காலத்தில் இரண்டு மடங்காக உங்களிடம் திருப்பி தரும் திட்டம் தான் போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டம். அந்த வகையில் மத்திய அரசின் கீழ் செயல்பாடும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள். ஆகச் சிறந்த சேமிப்பு திட்டங்களாக பார்க்கப்படுகின்றன.


 ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சேர்த்து நல்ல வருமானத்தை ஈட்டக்கூடிய பல திட்டங்களை அஞ்சல் சேமிப்பு கொண்டுள்ளது. 5 ஆண்டுகளில் நல்ல வருமானத்தை வழங்கும் அஞ்சல் அலுவலகத்தின் குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு விருப்பங்களில் ஒன்று தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டமாகும். NSC திட்டம் பல காரணங்களால் முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தை ஆங்கிலத்தில் நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் என்று கூறுவார்கள். எனவே மத்திய அரசின் இடமிருந்து தரப்படும் இந்த ஒரு திட்டத்திற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பும் கிடைத்துள்ளது.


 இந்தத் திட்டத்தில் முதலீட்டின் உச்ச வரம்பு இல்லை. மேலும் ஒரு நபர் ஒரே நேரத்தில் திட்டத்திற்காக பல கணக்குகளை திறக்க முடியும். அது மட்டுமல்லாமல், NSC டெபாசிட்டுகள் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கின்றன. இதுவே நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை வருமான வரி இல்லாமல் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News