மத்திய அரசின் "பிரதமர் கிஷான் திட்டம்" : பயனடைந்த விவசாய குடும்பங்கள் !

மத்திய அரசின் பிரதான் கிஷான் திட்டங்கள் மூலம் பயனடைந்து ஒரு கோடி விவசாயக் குடும்பங்கள்.

Update: 2021-08-09 13:14 GMT

இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய முதுகெலும்பாக விவசாயிகள் இருக்கிறார்கள் எனவே அவர்களுடைய பயனுக்காக மத்திய அரசு கொண்டு வந்த ஒரு திட்டம் தான் பிரதமர் கிஷான் திட்டம். எனவே இந்தத் திட்டத்தில் தற்போது ஒன்பதாவது தவணையாக நிதியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விடுவிக்கிறார். ஒரு கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும் வகையில் அடுத்த தவணையாக ரூ. 19,500 கோடி நிதியை பிரதமர் மோடி அவர்கள் இன்று விடுவிக்கிறார்.


குறிப்பாக பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.38 லட்சம் கோடி நிதி உதவியானது, விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை பிரதமர் மோடி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இந்த திட்டத்தின் நிதியை ஒதுக்குகிறார். இந்த விழாவில் மத்திய வேளாண் மந்திரியும் கலந்து கொண்டுள்ளார். இதன்படி 9.75 கோடிக்கும் கூடுதலான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். விவசாயிகளுக்கு நேரடியாக உதவி செய்யும் ஒரு திட்டமாக இந்த திட்டம் இருக்கிறது பாராட்டத்தக்கது. 

Input:  https://www.indiatoday.in/india/story/pm-modi-releases-rs-19500-crore-pm-kisan-fund-1838681-2021-08-09

Image courtesy: India Today 


Tags:    

Similar News