RBI கொண்டு வந்த இரண்டு புதிய திட்டங்கள் !
ரிசர்வ் வங்கி கொண்டு வந்த இரண்டு புதிய திட்டங்கள் நிச்சயம் மக்களை கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.
ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிமுகம் செய்த அரசு பத்திரத்தில் ரீடைல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் திட்டத்தில் சுமார் 32,000 பேர் ரிஜிஸ்டர் செய்துள்ளனர். எனவே இதன் மூலம் இந்தத் திட்டம் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது மக்களை அதிகம் கவர்ந்து உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி பங்குச்சந்தையில் ரீடைல் முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வது போல் அரசு பத்திரத்திலும் முதலீடு செய்ய அனுமதி அளிக்க முடிவு செய்தது.
இதன் மூலம் அரசும் எளிதாக முதலீட்டை திரட்ட முடியும் என்பதோடு, முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றொரு முதலீட்டு தளமும் கிடைக்கும். இதற்காக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரீடைல் டைரெக்ட் ஸ்கீம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி கையால் துவங்கி வைத்தது. RBI உருவாக்கிய ரீடைல் டைரெக்ட் ஸ்கீம் என்ற திட்டத்தின் கீழ் அரசு வெளியிடும் பத்திகத்தில் நேரடியாக முதலீடு செய்ய சுமார் 32,000 ரீடைல் முதலீட்டாளர்கள் கடந்த 6 நாட்களில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்துள்ளனர். இது முதலீட்டாளர்கள் மத்தியிலான ஆர்வத்தை காட்டுவதோடு இதுவரை நிறுவன முதலீட்டாளர்களுக்கு மட்டுமே என்ற முற்றுரிமை ஆதிக்கத்தை உடைக்கப்பட உள்ளது.
இதேவேளையில் பத்திர விலையும், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதமும் எதிர் திசையில் பயணிக்கும் என்பதால், முதலீட்டு வல்லுனர்கள் ரீடைல் முதலீட்டாளர்கள் சரியாக கணக்கிட்டு அதன்பின்பு முதலீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Times now news