வருங்காலத்தில் RBI புதிய அறிமுகமாக டிஜிட்டல் கரன்சி பற்றிய அறிவிப்புகளை வெளியிடுமா?
இந்திய ரிசர்வ் வங்கி வருங்காலத்தில் டிஜிட்டல் கரன்சி பற்றித் தன்னுடைய கருத்துகளையும், அறிவிப்புகளையும் வெளியிட உள்ளதா?
உலக அளவில் திரும்பிய பக்கமெல்லாம் மற்றும் கிரிப்டோகரன்சி தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி உள்ளது என்று சொல்லலாம். சில நாடுகள் கிரிப்டோகரன்சிக்கு அங்கீகாரம் கொடுத்தாலும், பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகள் கூட கிரிப்டோகரன்சிக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்று சொல்லலாம். உதாரணத்திற்கு இந்தியா போன்ற நாடுகளில் அதற்கு அனுமதி கிடையாது. கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் அனைத்து நாடுகளும் இதை எப்படி? ஏற்றுக்கொள்வது என்பதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளது.
இந்தியாவிலும் இதே நிலை தான் சமீபத்தில் நடந்த நிதித்துறையில் நாடாளுமன்ற குழுவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யக் கூடாது ஒழுங்கமுறைப்படுத்த வேண்டும் முடிவுகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி (RBI) அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் பற்றி இன்னும் உறுதி அளிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே வருங்காலத்தில் RBI டிஜிட்டல் கரன்சிகளை வெளியிடுவது தொடர்பான முடிவுகளை கூறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி முற்றிலும் மாறுபட்டது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். டிஜிட்டல் கரன்சி சீனா, ஐரோப்பாவில் டிஜிட்டல் கரன்சிக்கான சோதனை ஓட்டம் நடந்து வரும் நிலையில் அமெரிக்கா, இந்தியா உட்படப் பல நாடுகள் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் கரன்சி மூலம் பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்ப முடியும், இதேபோல் யாரிடம் இந்தப் பணம் இருக்கிறது, எங்கெல்லாம் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதையும் கண்காணிக்க முடியும்.
Input & Image courtesy:Hindustantimes