லாக்கர் பராமரிப்பில் வர இருக்கும் புதிய மாற்றம்: சாமானிய மக்களை பாதிக்குமா?
லாக்கர் பராமரிப்பு வசதிகள் புதிய மாற்றங்களை RBI கொண்டுவர உள்ளது.
மக்கள் தங்களிடம் இருக்கும் அதிகமான நகைகள் மற்றும் பாதுகாக்கப்படவேண்டிய பத்திரங்களை என்று அனைத்தையும் வங்கியில் பாதுகாப்பாக வைத்திருக்க 'பாதுகாப்பு பெட்டகம்' அதாவது லோகர் வசதியை நம்புகிறார்கள். அனைத்து வங்கிகளும் தங்களுடைய வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வாங்கி வழங்குகிறது. இதற்கான கட்டணத்தை வாடிக்கையாளரிடம் இருந்து அவர்கள் வசூல் செய்கிறார்கள். எனவே இந்த பராமரிப்பில் தற்போது புதிய மாற்றத்தை கொண்டுவர மத்திய வங்கி முடிவுசெய்துள்ளது.
எனவே திருத்தம் செய்யப்பட்ட இந்த புதிய விதிகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட லாக்கர் வசதியை பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த லாக்கர் உள்ள பொருட்களை உரிய நபர் எடுக்காவிட்டால், அவற்றை வங்கி அதிகாரிகள் எடுத்து உரிய நபரிடம் ஒப்படைக்குமாறு ஆணையைப் பிறப்பித்துள்ளது. மேலும் லாக்கர் கட்டணத்தை 7 ஆண்டுகளுக்கு மேல் செலுத்தும் உள்ள வாடிக்கையாளர்கள் லாக்கரை திறப்பதற்கான அதிகாரத்தையும் வழங்கியுள்ளது.
மேலும் லாக்கர் திறப்பது தொடர்பான தகவல்களை உரிய வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் SMS மூலமாகவும் அதிகாரிகள் தெரிவிக்கவும். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் லாக்கர் திறப்பது வீடியோ வடிவில் எடுக்கப்படும். பின்னர் அதில் உள்ள பொருட்களை உரிய வாரிசுதாரர்கள் அல்லது நாமினி இடம் ஒப்படைக்குமாறு RBI உத்தரவை பிறப்பித்துள்ளது. எனினும், இயற்கை பேரிடர், அதாவது, பூகம்பம், வெள்ளம், மின்னல், புயல் மற்றும் சூறாவளி போன்றவற்றினால் ஏற்படும் எந்த இழப்பிற்கும் வங்கி பொறுப்பேற்காது என்றும் கூறியுள்ளது.
Input & Image courtesy: Zee news