ஒமிக்ரான் வைரஸ் காரணமாக RBI வங்கி வட்டி விகிதம் குறைக்கப்படுமா?
தற்பொழுது புதிதாக உருமாறியுள்ள ஓமிக்ரான் வைரஸ் காரணமாக வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம்.
முன்பு இந்தியாவில் இருந்த வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான வட்டி விகிதங்கள் அதை மீறி நீடித்துக் இருந்தன தற்போது பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் வேளையில் நாட்டின் பணப்புழக்கத்தைக் குறைத்து அதன் மூலம் பணவீக்கம் மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு RBI தனது நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்தலாம் என்று முன்பு கணிக்கப்பட்டது.
இதை போல் அமெரிக்கப் பெடரல் வங்கியும் பணப்புழக்கத்தைக் குறைக்க வட்டியை உயர்த்த திட்டமிட்டு வந்தது. ஆனால் தற்போது மொத்த நிலைமையும் மாறியுள்ளது. இதற்கு முதலும் முக்கியக் காரணம் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா ஒமிக்ரான் தான்.
இந்த நாணய கொள்கை கூட்டத்திலும் எவ்விதமான வட்டி மாற்றத்தையும் அறிவிக்காது என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக, நாணய கொள்கை மீண்டும் திரும்பப் பெற முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது. RBI தனது வட்டி விகிதத்தை இந்தக் கூட்டத்திலும் உயர்த்தவில்லை எனில் 9 நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து ஓரே வட்டி விகிதம் நடைமுறையில் இருக்கும். ஆனால் வர்த்தக வங்கிகள் தங்களது வருமானத்தை அதிகரிக்க வட்டியை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
Input & Image courtesy:Economic times