RBI கவர்னர் பதவி ஆண்டு காலம் நீடிப்பு: ஒப்புதல் கொடுத்த நாடாளுமன்றம் !

தற்போது RBI கவர்னரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலை நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.

Update: 2021-10-29 13:30 GMT

தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றி வரும் சக்திகாந்த தாஸ் அவர்களின் பதவி காலம் 3 ஆண்டுக் காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2024ஆம் ஆண்டு வரையில் சக்திகாந்த தாஸ் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்ற உள்ளார். 24-வது கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்த பின்பு, 25வது கவர்னராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற நிலையில், இவருடைய பதவி காலம் வருகிற டிசம்பர் 10, 2021 உடன் முடிவடைகிறது. இதனால் அடுத்தக் கவர்னர் தேடுவது கட்டாயமாகியுள்ளது. பதவி காலம் நீட்டிப்பு சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய அரசுக்கு மத்தியிலான உறவு பிற கவர்னர்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் காரணத்தால் இரு தரப்பு ஒப்புதல் அடிப்படையில் மீண்டும் கவர்னர் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 


நாடாளுமனத்தின் நியமன குழு இவருடைய நியமனத்தை நாடாளுமனத்தின் நியமன குழு ஒப்புதல் அளித்து டிசம்பர் 10, 2021-க்குப் பின் மூன்று ஆண்டுக் காலம் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில் சக்திகாந்த தாஸ் ரிசர்வ் RBI கவர்னராகத் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 1980ஆம் ஆண்டு IAS அதிகாரியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி கவர்னராக பதவியேற்கும் முன் பொருளாதார விவகாரத் துறையின் செயலாளராக இருந்தார். இந்நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீரென ராஜினாமா செய்த நிலையில், சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். 


சக்திகாந்த தாஸ் அவர்களின் பணிக்காலத்தில் பல முக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவானது. குறிப்பாக, கொரோனா தொற்றால் பொருளாதாரம் சரிவு, வங்கி நிர்வாகம், வங்கியில் நிதி உட்செலுத்தல், வங்கி கொள்கை வடிவமைப்பு, சீரமைப்பு என்ற பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளது. முக்கியப் பொறுப்பு சக்திகாந்த தாஸ் தலைமையில் தான் ரெப்போ விகிதத்தைப் பெரிய அளவில் குறைக்கப்பட்டு, கொரோனா காலத்தில் மக்களுக்கு மோரோடோரியம் அளித்துப் பெரும் வாய்ப்பை கொடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வரும் முக்கியமான பொறுப்பு அடுத்த 3 வருடத்தில் RBI கவர்னர் அவர்களுக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy:Moneycontrol

 





Tags:    

Similar News