மாநிலங்களின் பொருளாதார அறிக்கை வெளியீடு: உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் RBI !

இன்று மாநிலங்களின் பொருளாதார அறிக்கை வெளியீடு செய்த, RBI இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Update: 2021-08-18 13:41 GMT

இந்தியாவின் மத்திய வங்கியாக செயல்படும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா(RBI), இன்று மாநிலங்களின் பொருளாதார நிலை எப்படி? இருக்கின்றது என்று அறிக்கை வெளியிட்டு செய்தது. அதில் குறிப்பாக இந்தியாவில் உற்பத்தியின் எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்தப் பெரும் நோய் தொற்றுக்கு பிறகு, இனி பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்காக உற்பத்தியின் நடவடிக்கைகளை நாம் சிறிது சிறிதாக அதிகரிக்க வேண்டும் என்றும் RBI கூறியிருக்கிறது. 


குறிப்பாக இந்தியாவில் இரண்டாவது அலை காரணமாக பொருளாதார பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆனால் தற்போது பாதிப்புகள் எண்ணிக்கை குறைந்து வரும் ஒரு சூழ்நிலையில் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய உற்பத்தியை முழு அளவில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. நாம் தற்போது நோய்தொற்று மிகவும் சிறப்பான முறையில் எதிர்கொண்டு வருகிறோம். குறிப்பாக தடுப்பூசிகள் மூலம் அதை கச்சிதமாக செய்கின்றோம். அதைப்போலத்தான் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு முயற்சியிலும் ஒவ்வொரு கட்டமாக அதிகரிக்க, அதிகரிக்க பின்னர் அது முழு கட்டத்தை எட்டி விடும் என்றும் கூறியிருக்கிறது. 


RBI அறிக்கையின் படி, பொருளாதாரத்தின் புத்துயிர் பெறுவதற்கான மற்றொரு அறிகுறி, பெருநிறுவனங்கள் முதல் தொற்றுநோயின் இரண்டாவது அலையை எதிர்கொண்ட விதம் மிகவும் சிறப்பானது. பட்டியலிடப்பட்ட 1,427 நிதி சாராத நிறுவனங்கள் இதுவரை தங்கள் வருவாய் முடிவுகளை அறிவித்துள்ளன. மேலும் அவை இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிதிசாரா நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில் 86.8% ஆகும் என்று அது கூறியுள்ளது. இதுவரை, பணவீக்கம் எதிர்பார்த்த பாதையில் உள்ளது என்று RBI சொல்கிறது. 

Input:https://indianexpress.com/article/business/economy/rbis-state-of-the-economy-report-manufacturing-activity-gradually-turning-around-7458764/

Image courtesy:Indian Express 


Tags:    

Similar News