வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் புதிய எச்சரிக்கை விடுத்த RBI !

இந்தியாவில் எந்த ஒரு வங்கியிலும், கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு RBI தற்பொழுது புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-09-16 14:16 GMT

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நூதன திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. தற்போது வங்கி விவரம் அனைத்தும் இணைய வழி ஆனதால் அந்த விவரங்களை திருடும் வகையில், இணைய திருடர்கள் புதிய வகையில் மோசடி செய்து வருகின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி விவரம் குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களை(KYC) புதுப்பிப்பதாக கூறி மோசடிகள் அதிகம் நடைபெறுவதாக புகார் எழுந்து வருகிறது. 


எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, RBI அறிவுறுத்தியுள்ளது. வங்கி கணக்கு எண், இணையதள வங்கி சேவை விவரங்கள், கார்டு குறித்த தகவல்கள், போன் நம்பர், OTP உள்ளிட்ட எந்த தகவல்களையும், வாடிக்கையாளர்கள் போன், SMS, இ-மெயில் முதலியனவற்றை அடையாளம் தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாது என்று RBI எச்சரித்துள்ளது. மேலும் வங்கி கணக்கு முடக்கப்படும் எனக்கூறி இது போன்ற தகவல்களை வாடிக்கையாளரிடமிருந்து பெற்று பணத்தை திருடுவது அதிகமாகி வருகிறது.


எனவே, வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும், KYC புதுப்பிப்பதற்காக வரும் இணைப்புகளை வாடிக்கையாளர்கள் தங்களது தொலைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய கூடாது எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தி உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல் பட வேண்டும் என்று RBI கூறி உள்ளது. 

Input & image courtesy:NDTV news



Tags:    

Similar News