ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை: RBI அறிவிப்பு !
RBI வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முடிவில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமாக ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் அறிவித்துள்ளது. இதனால் வங்கியில் கடன் வாங்கிய அனைவருக்கும் தங்களது வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இருந்தாலும் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு கொடுக்கப்படும் வட்டி விகிதமானது எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பது பலரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் இந்திய பொருளாதாரம் இன்னும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் தளர்வுகள் நம்பி தான் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் வங்கியில் கொடுக்கப்படும் வட்டி விகிதத்தில் தளர்வுகள் செய்யப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வந்தன ஆனாலும் வங்கி வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை. இதன் மூலம் 2வது அலைக்குப் பின்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ள வேளையில் இன்று நடக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் கணிப்புகள் வெளியாகியிருந்தது. ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் முடிந்த நிலையில் RBI தனது ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 3.35% என எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று RBI அறிவித்து உள்ளது. இதேபோல் 4வது காலாண்டில் 6.1 சதவீதம் வரையில் உயரும் என்று கணித்துள்ளது. இதேவேளையில் 2023ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 17.1 சதவீதமாக இருக்கும் கணித்துள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரம் இதுநாள் வரையில் நிலையாக இல்லாமல் தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருப்பதால், நாட்டின் வளர்ச்சிக்கு இன்னமும் நாணய கொள்கை தளர்வுகள் தேவைப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Input & Image courtesy:News 18